பயங்கர சப்தத்துடன் குரைத்து சாதனையை முறியடித்த நாய்

செவ்வாய்க்கிழமை, 26 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், மார்ச். 27 - ஆஸ்திரேலியாவை சேர்ந்த சார்லி என்ற நாய் பயங்கர சப்தத்துடன் குரைத்து கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளது. அதிக சப்தத்துடன் குரைக்கும் நாய்களுக்கு 2009 ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் பிரிட்டனை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாய் வெற்றி பெற்றது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. அந்த நாயின் குரைப்பு சப்தம் 108 டெசிபல் என்ற ஒலி அளவில் பதிவானது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அதிக சத்தத்துடன் குரைக்கும் நாய்களுக்கான போட்டி சமீபத்தில் நடைபெற்றது. அதில் அந்நாட்டின் அடிலைடு நகரை சேர்ந்த சார்லி என்ற 6 வயது நாய் 113 என்ற டெசிபல் அளவுக்கு பயங்கரமாக குறைத்து வெற்றி வாகை சூடியுள்ளது. 

கோல்டன் ரிட்ரிவர் வகையை சேர்ந்த இந்த நாய், முந்தைய சாதனையை முறியடித்துள்ளதாக கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சார்லியின் உரிமையாளர் பெலிண்டா பிர்பெய்ர்ன் கூறுகையில், இந்த நாய் ராக் இசை குழுவினர் நேரடியாக இசைத்தால் என்ன ஓசை எழுப்புமோ அந்த அளவுக்கு சத்தத்துடன் குரைக்கும். இந்த திறனை சார்லி ஒரு வயது இருக்கும் போது பெற்றது. எனினும் எனது பக்கத்து வீட்டார் நாய் குறித்து என்னிடம் குறை கூறுவதில்லை. 

ஏனெனில் அது நாம் கட்டளையிட்டால் மட்டுமே குரைக்கும். மற்றபடி மிகவும் அமைதியாகவே இருக்கும். உயர்ந்த நாய் என்று எனது சார்லிக்கு பட்டம் அளிக்கப்பட்டிருப்பதால் அதை நினைத்து நானும் எனது 3 மகள்களும் பெருமைப்படுகிறோம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: