முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவதை நிறுத்த கடிதம்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

சென்னை, மார்ச்.28 - பெண்ணையாற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த  வேண்டும் என்றும்,   பெண்ணையாற்று பகுதியில், தடுப்பணை உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செய்வதற்கு முன் தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா அரசு பெற அறிவுறுத்த வேண்டும் என்றும்   பிரதமருக்கு முதல்- அமைச்சர் ஜெயலலிதா  கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா  எழுதியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக மாநில அரசு தடுப்பணைகள் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கடந்த 19.5.2012-ம் ஆண்டு நான் எழுதிய கடிதத்தின் தொடர்ச்சியாக மீண்டும் இந்த கடிதத்தை நான் உங்களுக்கு எழுதுகிறேன். கர்நாடக மாநில அரசு தனது பகுதிக்கு உட்பட்ட முகலூரில் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றைக் கட்டி அதிலிருந்து நீரை எடுத்துச் சென்று லக்கூர் ஏரியில் நிரப்பி பிறகு அதை பாசனத்திற்கு பயன் படுத்துவதாக பத்திரிகைகளில் பெரிய அளவில் செய்தி வெளியானது.

கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை காரணமாக பெண்ணையாற்றில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீரின் அளவு பெருமளவு குறையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெண்ணை யாற்றின் நீர்ப்பாசனம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த பிரச்சினையில் தாங்கள் உடனடியாக தலையிட்டு பெண்ணையாற்றில் கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்த அறிவுறுத்த வேண்டும். மேலும் தடுப்பணை உள்ளிட்ட எந்த திட்டங்களையும் பெண்ணையாற்று பகுதியில் செய்வதற்கு முன் தமிழக அரசின் ஒப்புதலை கர்நாடகா பெற அறிவுறுத்த வேண்டும்.

இந்த பிரச்சினையில் தங்களது சாதகமான பதிலை மிக விரைவில் எதிர்ப்பார்க்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்