சுவிட்சர்லாந்து பெண் பலாத்காரம்: குற்றப்பத்திரிகை தாக்கல்

புதன்கிழமை, 27 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

ததியா,மார்ச்.28 - சுவிட்சர்லாந்து நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேர் மீது ததியா கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

கடந்த 16-ம் தேதி அன்று சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 36 வயதுடைய பெண் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஆர்ச்ஹாவுக்கு சைக்கிளில் சென்று கொண்டியிருந்தனர். அப்போது வனப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அவர்கள் ஓய்வு எடுத்துக்கொண்டியிருந்தபோது அந்த வழியாக ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்து அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 6 பேர்களையும் கைது செய்தனர். அந்த 6 பேர் மீதும் ததியா போலீசார் நேற்று முன்தினம் உள்ளூர் கோர்ட்டில் 100 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். அந்த 6 பேர்களையும் அடையாளம் காட்டாமல் அவர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மாதிரி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது முதல் தடவையாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். சுவிட்சர்லாந்து நாட்டு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது மற்றும் அவர்களிடம் கொள்ளயடிக்கப்பட்டது தொடர்பாக 100 பக்க குற்றப்பத்திரிகை நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது என்று பெண் போலீஸ் பிரிவு புலனாய்வு அதிகாரி என்.எஸ்.ராவத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: