முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      உலகம்
Image Unavailable

 

ஜகர்த்தா, ஏப்.26 - இந்தோனோசியா பகுதியில் உள்ள சுலாவேசி தீவின் தலைநகரான ஜெகந்தாரியில் நேற்று காலை 6மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். 

சுமார் 3லட்சம் மக்கள் வாழும் ஜெகந்தாரி பகுதியில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலஅதிர்வினால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் தென்கிழக்கு பகுதிகளில் வீடுகள் இடிந்ததால் மக்கள் கடும் பீதிக்குள்ளானார்கள். அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி ஏற்படுமோ என்ற பயத்துடன் இருந்தனர். ஆனால் சுனாமி எச்சரிக்கை விடப்படாததால் மக்கள் நிம்மதி அடைந்தனர். 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், பாவ்பாவ் பகுதியில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எந்த தகவல்களும் வெளியாகவில்லை. சுலாவேசியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவில் உள்ள மற்ற சிறிய தீவுகளிலும் உணரமுடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்