முக்கிய செய்திகள்

கோடைகால பயிற்சி முகாம் - பட்டிமன்ற நடுவர் ராஜா பேச்சு

திங்கட்கிழமை, 25 ஏப்ரல் 2011      தமிழகம்
Meenkshi 0

மதுரை,ஏப்.26 - கோடை கால பயிற்சியின் மூலம் குழந்தைகளின் ஆற்றல் வெளிப்படுகிறது என்று மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த விழாவில் பட்டி மன்ற நடுவர் ராஜா தெரிவித்துள்ளார்.

   மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளுக்கான 2 ம் ஆண்டு இலவச கோடைகால திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.  மருத்துவமனையும், மகாத்மா பள்ளியும் இணைந்து இந்த பயிற்சி முகாமினை நடத்துகிறது. சிறப்பு விருந்தினராக பட்டி மன்ற நடுவர் ராஜா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது, இது போன்ற பயிற்சி முகாம்களின் மூலமாக குழந்தைகளின் அறிவாற்றல் கூடுகிறது. விட்டுக்கொடுக்கும் தன்மை, பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை உள்ளிட்ட நல்ல பண்புகள் வளர்கின்றன. இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளுவின் காரணமாக குழந்தைகளைகவனிக்கும் நிலை குறைந்து வருகிறது. இந்த நிலை மாறி அதிக நேரம் பெற்றோர்கள் குழந்தைகளுடன் பேச வேண்டும். இது போன்ற பயிற்சி முகாம்களை நடத்துவதின் மூலம் குழந்தைகளுக்கு சமூக விழிப்புணர்வு, சமுதாய அக்கறையும் ஏற்படுகிறது என்றார்.

     மேலும் இந்த பயிற்சி முகாமில் கம்ப்யூட்டர் கோர்ஸ், ஸ்போக்கன் இங்கிலீஷ், ஓவியம், கலை, கண்ணாடி பெயிண்டிங், விளையாட்டுக்கள், உள்ளிட்ட வகுப்புக்கள் நடைபெறுகிறது. மகாத்மா பள்ளியிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் குழு வகுப்புகளை நடத்துகின்றனர். சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக மகாத்மா பள்ளி முதல்வர் துணைத்தலைமை ஆசிரியர் மித்ரா, மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். முடிவில் மார்க்கெட்டிங் மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மருத்துவமனையின் மேலாளர்கள் ஜான்சன், ஜெயந்திலால், உமா ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: