முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மத்திய மந்திரிகளை நீக்க சோனியா காந்தி முடிவு

சனிக்கிழமை, 6 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 7 - 2014 ம் ஆண்டு மே மாதத்துடன் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைவதால் அதற்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. தற்போது காங்கிரஸ் கூட்டணி அரசு மெஜாரிட்டி பலமில்லாமல் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் தயவில் ஆட்சியில் நீடித்து வருகிறது. அந்த கட்சிகளின் மிரட்டலால் முன்கூட்டியே இந்த ஆண்டு நவம்பருக்குள் தேர்தல் வரலாம் என்ற சூழ்நிலை உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. பாராளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜ.க அதிரடி மாற்றங்கள் செய்து ஆட்சி மன்ற குழுவை மாற்றியமைத்தது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து பா.ஜ.க வியூகம் அமைத்து வருகிறது. 

காங்கிரசும் முன்கூட்டியே தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மோடிக்கு போட்டியாக பிரதமர் வேட்பாளர் காங்கிரசில் யார் என்ற சர்ச்சை உருவாகி உள்ளது. காங்கிரசில் ஒரு தரப்பினர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆனால் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மன்மோகன்சிங்கே 3 வது முறையும் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். 

இந்த நிலையில் கட்சியில் மாற்றங்கள் செய்ய தலைமை முடிவு செய்துள்ளது. மே மாதம் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததும் மத்திய பிரதேசம், மிசோராம், டெல்லி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 6 மாநிலங்களிலும் நடக்கும் தேர்தலோடு பாராளுமன்ற தேர்தலையும் நடத்தலாம் என்று காங்கிரஸ் ஆலோசித்து வருகிறது. 

தேர்தலை சந்திக்க வசதியாக கட்சி நிர்வாகிகள் மாற்றப்படுவார்கள். இதன் முதல் கட்டமாக சர்ச்சைக்குரிய மந்திரிகள் மற்றும் செயல்பாடு குறைந்த மந்திரிகள் நீக்கப்பட்டு முழு நேர கட்சி பணிக்கு அனுப்பப்படுவார்கள். இதில் யார், யாரை நீக்கலாம் என்பது குறித்து சோனியா ஆலோசனை நடத்தி வருகிறார். மந்திரி பதவி நீக்கப்படுவோர் பட்டியலில் ஜெய்ராம் ரமேஷ், சி.பி. ஜோஷி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். 

இருவரும் 6 மாநில தேர்தல் பொறுப்புகளை கவனிக்கும் வகையில் கட்சி பணிக்கு அனுப்பப்படுவார்கள். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் இரு மந்திரிகளும் நீக்கப்படுவார்கள் என்றும் அப்போது மத்திய மந்திரி சபையில் சிறிய அளவில் மாற்றம் இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே தேர்தலுக்கு முன்பு பணிகளை செயல்படுத்தும் வகையில் 27 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்