ஹாங்காங், ஏப். 11 - சீனப்பேரரசர் காலத்து அபூர்வ வகை தாமரை கிண்ணம் 52 கோடிக்கு ஏலம் போனது. ஹாங்காங் சோத்பி ஏல மையத்தில், 1662-1722 ஆண்டு காலத்தில் சீனாவை ஆண்ட பேரரசர் காங்ஜி பயன்படுத்திய அபூர்வ வகை சிகப்பு தாமரை கிண்ணம் ஒன்று ஏலத்துக்கு வந்தது. இளம் சிகப்பு, மஞ்சள் மற்றும் உதா நிறத்துடன் வரையப்பட்ட அந்த தாமரை கிண்ணத்தை, ஹாங்காங் பீங்கான் பொருட்கள் விற்பனையாளர் 9.5 மில்லியன் டாலருக்கு (சுமார் 52 கோடிக்கு) ஏலம் எடுத்தார். கடந்த வருடம் இது போன்று பூ வடிவிலான அரசர் காலத்து வண்ணக்கிண்ணமும் 27 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
- உவரி சுயம்புலிங்க சுவாமி ரதம்.
- மதுரை வண்டியூரில் மீனாட்சி சுந்தரரேசுவரர் எழுந்தருளி தெப்போற்சவம்.
- குன்றக்குடி, சென்னை கபாலீசுவரர், காஞ்சிப் பெருந்தேவி இத்தலங்களில் தெப்போற்சவம்.
- மேல்மருவத்தூர் தீப தரிசனம்.
- வடலூர் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
- பழனி, திருச்சேறை சாரநாதர், கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, மருதமலை முருகப்பெருமான் இத்தலங்களில் ரதம்.
- மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக்கூடு.