முக்கிய செய்திகள்

பழனி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடியை தாண்டியது

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
no image 13

பழனி,ஏப்.27 - பழனி கோயில் உண்டியல் வசூல் ரூ. ஒரு கோடியை தாண்டியது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் மற்றும் தங்க நகைகள் ஆகியவை கோயில் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் உண்டியல் வசூல் மூலம் ரூ. ஒருகோடியே 31 லட்சத்து 85 ஆயிரத்து 540 ம், தங்கம் ஆயிரத்து 297 கிராமும், வெள்ளி 6480 கிராமும், வெளிநாட்டு கரன்சி 322 ம் வசூலாகி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி ராஜமாணிக்கம், உதவி ஆணையர் நடராஜன் உள்ளிட்ட கோயில் ஊழியர்கள் பலரும் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: