முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கைக்கு வழங்கும் உதவியை குறைக்க அமெரிக்கா முடிவு

திங்கட்கிழமை, 15 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஏப்ரல்.16 - இலங்கைக்கு அளிக்க உள்ள நிதி உதவியில் 20 சதவீதத்தை அதாவது 11 மில்லியன் டாலரை குறைக்க அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி முடிவு செய்துள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததும் அங்கு மனித உரிமை மீறல் சம்பவங்தள் அதிகரித்துள்ளன. அங்கு தமிழர்களை குடியமர்த்தும் பணிகள் சரிவர நடைபெறவில்லை.  அரசியல் நிலவரமும் சீராக இல்லை. இதனால் அமெரிக்கா, இலங்கைக்கு வழங்க உள்ள உதவியில் 20 சதவீத்ததை குறைக்க முடிவு செய்துள்ளது.

தற்போது அமெரிக்காவுக்கும்- இலங்கைக்கும் அரசியல் ரீதியாக உள்ள உறவு சீராக இல்லை. இலங்கையில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்துள்ளன.

இலங்கையில் நடைபெற்ற சம்பவங்களை சேனல் 4 என்ற டெலிவிஷன் செய்திச் சேனல் வெளியிட்டது. இதையடுத்து இலங்கை மீது உரிமை மீறல் பிரச்சனையை அமெரிக்கா கொண்டு வந்தது. இந்தத் தீர்மானம் ஐ.நா. சபையில் நிறைவேறியது. இதையடுத்து இலங்கைக்கும்-அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது.இது இலங்கைக்கு அமெரிக்கா கொடுக்க உள்ள உதவியில் தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு கொடுக்கும் உதவியில் 29 சதவீதம் அதாவது 11 மில்லியன் டாலரை  அமெரிக்கா குறைத்துள்ளது. இலங்கையில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவது உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இலங்கை அரசு உற்சாகம் காட்டவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை அங்கு இலங்கை அரசு செலவிடவில்லை. பிறகு நாங்கள் எப்படி இலங்கைக்கு உதவி செய்ய முடியும் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கேட்டார்.

ஓரளவு வருமானம் உள்ள இலங்கைக்கு உதவுவது என்று நாங்கள் முடிவு செய்தோம். ஆனால் எங்களது உதவி தேவையில்லாதது என்பது போன்ற தோற்றத்தை இலங்கை அரசு ஏற்படுத்தியது. எனவே நாங்கள் இலங்கைக்கு உதவி செய்ய முடியாத  ஒரு நிலை ஏற்பட்டது. அமெரிக்காவின் வளர்ச்சி உதவி 2012-ம் ஆண்டில் 8 மில்லியன் டாலராக இருந்தது. வங்காள தேசத்துக்கு 81.6 மில்லியன் டாலர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் உற்ற நண்பனான மாலத்தீவுக்கு அதிக அளவு உதவி செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.அமெரிக்காவின் நிதி உதவி இலங்கையில் வளர்ச்சிப் பணிகளுக்கும், மாலத்தீவில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் கொடுக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago