முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிங்பிஷர் நிறுவன பங்கு விலை சரிவு..!

செவ்வாய்க்கிழமை, 16 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, ஏப். 17 - கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று அடியோடு சரிந்து ஒரு பங்கு ரூ. 6.90 க்கு விற்பனையாகிறது.  இந்தப் பங்குகளின் விலை 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி ரூ. 335 ஆக இருந்தது நினைவுகூறத்தக்கது.

ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகளிடம் ரூ. 7,000 கோடியை வாங்கிய கிங்பிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா, அதற்கு இப்போது வட்டி கூட கட்டவில்லை. இந்தப் பணத்தை அவரிடம் இருந்து எப்படி மீட்பது என்று தெரியாமல் வங்கிகள் திணறி வருகின்றன.

ஏர்லைன்ஸ்சும் மூடப்பட்டு விட்டது, விமானங்களை குத்தகைக்குத் தந்தவர்கள் எடுத்துச் செல்ல ஆரம்பி விட்டனர், ஏர்லைன்ஸ்சின் லைசென்ஸ் ரத்தாகி விட்டது, ஊழியர்களுக்கு பல மாதம் சம்பளம் கொடுக்கவில்லை, எரிபொருள் நிறுவனங்களுக்கு கடனை அடைக்கவில்லை. இப்படி பல நெருக்கடிகளில் உள்ளது கிங்பிஷர் நிறுவனம்.

இந்நிலையில் வாங்கிய கடனுக்காக மல்லையா தந்த சில சொத்துக்களையும் சில நிறுவனங்களின் பங்குகளையும் விற்கும் வேலையை வங்கிகள் ஆரம்பித்துள்ளன. மேலும் இப்போதைக்கு இந்த விமான நிறுவனம் மீண்டும் இயங்க வாய்ப்பில்லை என்பதும் உறுதியாகிவிட்டது. இதையடுத்து நேற்று அதன் பங்குகள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்தன. அதன் விலை இப்போது ரூ. 6.90 ஆக உள்ளது. இந்தப் பங்குகளின் விலை 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27ம் தேதி மிக அதிகபட்சமாக ரூ. 335 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்