முக்கிய செய்திகள்

மறைமலைநகர் அருகே நடந்த விபத்தில் 4 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 26 ஏப்ரல் 2011      தமிழகம்
no image 15

 

சென்னை, ஏப்.27 - செங்கல்பட்டு மறைமலைநகர் அருகே நேற்று மாலை நடந்த கோரவிபத்தில் டவுன் பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் பல் டாக்டர், லாரி டிரைவர் உட்பட 4 பேர் பலியானார்கள். 14 பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்த விபரம் வருமாறு:-

செங்கல்பட்டு அருகே உள்ள மறைமலை நகரில் நேற்று மாலை 6.20 மணிக்கு நடந்த சாலை விபத்தில் செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற டவுன்பஸ்சும், தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த லாரியும் மோதிக்கொண்டது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பல் டாக்டர் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்தில் 14 பேர் படுகாயமடைந்து செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த கோர விபத்தில் லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார். அரசு பஸ்சில் பயணம் செய்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டனர். அந்த மூன்று பேரில் ஒருவர் அடையாளம் தெரிந்தது. அவர் பெயர் ஹரீஸ்ய அவர் ஒரு பல் டாக்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவரின் விபரம் தெரியவில்லை. அரசு பஸ்சில் பயணம் செய்த 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் விபரம் வருமாறு:-

கன்னியப்பன், அழகி, சபாபதி, பாலாஜி, ஜீவா, சுபிஷ்சா, சுமிதா, அறிவழகன், தீபக்ஸ்ரீ, வளர்மதி, வசந்தகுமாரி, நாதமுத்து, திருமால் உட்பட 14 பேர் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த விபத்தில் அரசு பஸ்சின் டிரைவரும், கண்டெக்டரும் உயிர் தப்பிவிட்டனர். இது குறித்து மறைமலைநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

ஜனசந்தடி மிகுந்த மாலை நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் பல மணி நேரம் வாகனங்கள் நெரிசலில் சிக்கி நின்றன. இதனால் அந்த பகுதி முழுதும் பரபரப்பு காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: