முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இயக்குனர் கவுதம் மேனனுக்கு முன்ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 19 ஏப்ரல் 2013      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப்.20 - சினிமா இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை வரும் 26 -ம் தேதி வரை கைது செய்வதற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. ஆர்.எஸ்.இன்டிபோடைமண்ட் பட நிறுவனத்தின் பங்குதாரர் ஜெயராமன், பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு எதிராக சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த 3ம் தேதி மோசடி புகார் ஒன்றை கொடுத்தார். இந்த புகாரை அடுத்து கவுதம் வாசுதேவ் மேனன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ஆர்.எஸ்.இன்டிபோ டைமண்ட் நிறுவனம் தயாரித்த விண்ணை தாண்டி வருவாயா படத்தை இந்தியில் ரிமேக் செய்ய டிபாக்ஸ் ஸ்டார் போட்டான் கம்பெனியுடன் இணைந்து ரூ.13.58 கோடியில் படம் தயாரிக்கப்பட்டது.இந்த படத்தை வெளியிட்டதன் மூலம் கிடைத்த லாபத்தை கொடுக்காமல் தான் ஏமாற்றி விட்டதாக தயாரிப்பாளர் ஜெயராமன் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் அளிக்க வேண்டுமென்று கவுதம் வாசுதேவ் மேனன் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.சுப்பையா இம்மாதம் 26 -ம் தேதி வரை கவுதம் வாசுதேவ் மேனனை கைது செய்யக்கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இருப்பினும் போலீஸ் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!