முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு 2 வார சிறை

சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஏப். 21 - பாகிஸ்தான் முன்னாள் அதிபரும், ராணுவ ஆட்சியாளருமான பர்வேஸ் முஷாரப்புக்கு 14 நாட்கள் சிறைக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று அவர் தீவிரவாத தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் மீது பெனாசீர் பூட்டோ படுகொலை,நீதிபதிகளை கடத்தியது உள்ளிட்ட 3 வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் அவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி துபாய் மற்றும் லண்டனில் வசித்து வந்தார். இந்தநிலையில் பாகிஸ்தானில் அடுத்தமாதம் 11 ம் தேதி பொதுத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அவர் கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானுக்கு திரும்பினார். தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் தாயகம திரும்பி இருந்தார். 

இதனிடையே கடந்த 2007ம் ஆண்டு அவர் அதிபராக இருந்தபோது 60 நீதிபதிகள் கைது செய்யப்பட்டு நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் கைது செய்யப்பட்ட வழக்கில் அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீன் நீட்டிப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தன்னை கைது செய்து விடுவார்கள் என்று பயந்த முஷாரப் நீதிமன்றத்தில் இருந்து தன் பாதுகாவலர்கள் உதவியுடன் தப்பியோடினார். அவரை வலைவீசி தேடிவந்த போலீசார் நேற்று முன்தினம் இஸ்லாமாபாத் அருகே அவரது பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த அவரை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் முஷாரப்பை ஆஜரப்படுத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டது. 

கோர்ட் உத்தரவுப்படி நேற்று அவர் பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவரை 2 வார காலம் சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை மே மாதம் 4 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago