முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆ.ராசா குற்றவாளி என்றால் நீங்களும் குற்றவாளிதான் மன்மோகன் சிங்கிற்கு சின்ஹா கடிதம்

புதன்கிழமை, 24 ஏப்ரல் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 25 - ரூ.1.76 லட்சம் கோடி 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி என்றால் நீங்களும் குற்றவாளிதான் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.  2 ஜி ஸ்பெக்டரம் ஊழல் குறித்து பி.சி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தியது. விசாரணை அறிக்கையில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா குற்றவாளி என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.  இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பாரதிய ஜனதா மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார். அதில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஆ.ராசா குற்றவாளி என்றால் நீங்களும் குற்றவாளிதான் என்று கூறியுள்ளார்.  2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடுவதில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஆலோசனை செய்த பின்னர்தான் எடுக்கப்பட்டது என்று பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு ஆ.ராசா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளார். அதனால் நீங்களும் (பிரதமர் மன்மோகன் சிங்) குற்றவாளிதான். மேலும் பாராளுமன்ற கூட்டுக்குழு முன்பு விசாரணைக்காக நீங்கள் ஆஜராக வேண்டும். நீங்கள் அமைதியாக தொடர்ந்து இருந்தால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்களும் சம்பந்தப்பட்டிருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தமாகும். கடந்த 2-ம் தேதி எனக்கு ஒரு கடிதம் எழுதினீர்கள். அதில் மறைப்பதற்கு என்னிடத்தில் ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளீர். ஆனால் உங்களது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆ.ராசா, உங்கள் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். அதனால் நீங்கள் கூறியது அனைத்தும் நிராகரிக்கப்படக்கூடியதாக உள்ளது. நீங்கள் அமைதியாக இருப்பது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் நீங்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று மக்கள் சந்தேகிப்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. உங்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.யான சி.பி.சாக்கோ தலைமையிலான பாராளுமன்ற கூட்டுக்கூட்டம் இன்று கூடுகிறது. அப்போது கமிட்டியானது பெரும் முட்டுக்கட்டையை சந்திக்க நேரிடும்.  ஜே.பி.சி. அறிக்கையில் பிரதமர் மன்மோகன் சிங், மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த அறிக்கையை அங்கீகரிப்பதற்காக ஜே.பி.சி. கூட்டம் இன்று நடக்கவுள்ளது. இந்தநிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு யஷ்வந்த் சின்ஹா கடிதம் எழுதியுள்ளார்.  ஜே.பி.சி.க்கு ஆ.ராசா அனுப்பியுள்ள அறிக்கையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டதில் நுழைவுக்கட்டணம் உள்பட பல முக்கிய முடிவுகள் பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர்தான் எடுக்கப்பட்டது என்று கூறியுள்ளார். இதனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்