முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேச கட்டிட சம்பவம்: சாவு எண்ணிக்கை உயர்வு

வெள்ளிக்கிழமை, 26 ஏப்ரல் 2013      உலகம்
Image Unavailable

 

டாக்கா, ஏப். 27 - வங்கதேச தலைநகரம் டாக்காவில் 8 மாடி கட்டிடம் சமீபத்தில் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கட்டிடம் இடிந்து தரைமட்டமானது. இதையடுத்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இக்கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 290 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 100 பேர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர். 

இன்னும் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்று தேடிப் பார்த்து வருகிறோம் என்று தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வங்கதேசத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பலியானவர்கள் ஆடை தொழில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் என்பது தற்போது தெரியவந்துள்ளது. இந்த இடிபாடுகளை சுற்றி பொதுமக்கள் திரண்டிருந்தார்கள். 

இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட தங்களது உறவினர்கள், நண்பர்கள் பற்றி இவர்கள் செல்போன் மூலம் அறிய முயன்றனர். ஆனால் செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக தெரிகிறது. அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசினார்களாம். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுப் போனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்