முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர்

திங்கட்கிழமை, 29 ஏப்ரல் 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.30 - 20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்தார். சட்டப்பேரவையில் நேற்று மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக்கோரிக்கை விவாதத்திற்குப்பிறகு அமைச்சர் கே.சி.வீரமணியின் அறிவித்ததாவது:-

20 ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூபாய் 17.40 கோடி செலவில், 30 படுக்கை வசதிகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்படும்.

55 ஒருங்கிணைந்த அவசர பேறுகால மற்றும் சிசு பராமரிப்பு நிலையங்களுக்கு (இஉஙஞசஇ இடீடூசிஙுடீஙூ) தேவைப்படும் நவீன அறுவை சிகிச்சை தேவைப்படும் நவீன அறுவை சிகிச்சை உபகரண்கள், நவீன பிரசவக்கட்டில்கள், நிழலில்லா விளக்குகள் மற்றும் ஹெப்பா ஃபில்டர் வசதியுடன் கூடிய நவீன அறுவை அரங்கம் போன்ற மருத்துவ வசதிகள் ரூபாய் 18.20 கோடி செலவில் உருவாக்கப்பட்டு, தாய் சேய் நலம் மேம்படுத்தப்படும்.

மருத்துவ மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், இந்திய மருத்துவக்கழகத்தின் விதிகளுக்கேற்ப தேவையான உட்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளை ஏற்படுத்திட, மருத்துவக்கல்லூரிகளுக்கு ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கீழ், 25 மாவட்டங்களில் உள்ள 50 அரசு, மருத்துவமனைகளுக்கு, ரூபாய் 31.76 கோடி செலவில் கூடுதல் கட்டங்கள் கட்டடப்பட்டு, மருத்துவ வசதி மேம்படுத்தப்படும்.

கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ஆய்வக வசதிகளை மேம்படுத்த, செல்கவுண்டர்கள் (இடீங்ங் இச்சீடூசிடீஙுஙூ) மற்றும் நவீன உபகரணங்கள் ரூபாய் 16.02 கோடி செலவில், 192 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்படும்.

மருத்துவக்கல்லூரி இல்லாத 15 மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் உள்ள இரத்த வங்கிகளுக்கு, இரத்த பகுப்பாய்வு கருவிகள் மற்றும் 91 ஒருங்கிணைந்த அவசர பேறுகால மற்றும் சிசு பராமரிப்பு நிலையங்களில் (இஉஙஞசஇ இடீடூசிஙுடீஙூ)  உள்ள இரத்த சேமிப்பு நிலையங்களுக்கு உறைநிலை குளிர் சாதனப்பெட்டிகள்  (ஈடீடீஙீ ஊஙுடீடீபூடீஙுஙூ) போன்ற வசதிகள் ரூபாய் 9.42 கோடி செலவில் வழங்கப்படும்.

திருநெல்வேலி, தஞ்சாவூர், செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், இராயப்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் உள்ள பிரேதப் பரிசோதனைக்கூடங்கள் ரூபாய் ஒன்பது கோடி செவில் தரம் உயர்த்தப்படும்.

மாவட்ட, வட்ட மற்றும் வட்டம் சாரா அரசு மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப ஆட்டோ அனலைஸர், எலிசா கருவி போன்ற 17 வகையான ஆய்வக உபகரணங்கள் ரூபாய் 8.53 கோடி செலவில் வழங்கி ஆய்வக வசதிகள் மேம்படுத்தப்படும்.

நடமாடும் மருத்துவமனைத்திட்டத்திற்கு ரூபாய் ஏழு கோடி செலவில் 100 புதிய வாகனங்கள் வழங்கப்படும்.

திருச்சிராப்பள்ளி, செங்கல்பட்டு, தஞ்சாவூர், கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் வேலூர் ஆகிய 8 மாவட்டங்களில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த அவசர பேறுகால மற்றும் சிசு பராமரிப்பு நிலையங்கள் (இஉஙஞசஇ இடீடூசிஙுடீஙூ) மற்றும் பச்சிளங்குழந்தை தீவிர சிகிச்சைப்பிரிவுகளுக்கு (சடீச்டூஹசிஹங் ஐஷசீஙூ) ரூபாய் 6.53 கோடி செலவில் தேவையான நவீன மருத்துவக்கருவிகள் வழங்கப்பட்டு தாய் சேய் நல சேவைகள் மேம்படுத்தப்படும்.

செவிலியர்களின் தாய் சேய் நல பணித்திறனை மேம்படுத்த ரூபாய் 5.06 கோடி செலவில் மாவட்டத்திற்கு ஆறு செவிலிய பயிற்றுநர்கள் வீதம், 192 செவிலிய பயிற்றுநர்கள் நியமிக்கப்படுவார்கள்.

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் வளாகத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்ககத்திற்கு தனியாக ரூபாய் ஐந்து கோடி செலவில் அலுவலகக்கட்டடம் கட்டப்படும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்