முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாஸ்டன் குண்டுவெடிப்பில் சிக்கிய பெண்ணின் மரபணு யாருடையது?: பெண் தீவிரவாதியா

புதன்கிழமை, 1 மே 2013      உலகம்
Image Unavailable

 

பாஸ்டன்: மே, - 2 - அமெரிக்க குண்டுவெடிப்பில் 'திடீர்ா திருப்பமாக, ஒரு பெண்ணின் மரபணு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அது யாருடையது என போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சதியில் பெண் தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் மராத்தான் ஓட்டத்தை காண வந்த பார்வையாளர்களை குறிவைத்து சமீபத்தில் செசன்யா தீவிரவாதிகள் 2 பேர் இரட்டை குண்டு வெடிப்பு நடத்தினர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தீவிரவாதிகளில் ஒருவன் கொல்லப்பட்டான். மற்றொருவன் கைது செய்யப்பட்டான். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு துகள்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதில் ஒரு வெடிகுண்டு துகளில் பெண் ஒருவரின் மரபணு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குண்டுவெடிப்பு சம்பவத்தில் பெண் ஒருவரின் தொடர்பு இருக்க வேண்டும் என்ற யூகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒருவேளை இது குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களின் மரபணுவாக கூட இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. அதே சமயத்தில் வெடிகுண்டு தயாரித்ததில் சம்பந்தப்பட்டவரின் மரபணுவா அல்லது சதியில் ஏதேனும் பெண்ணிற்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் போலீசார். மேலும் இது குறித்து வெடிகுண்டு சதியில் கொல்லப்பட்ட தீவிரவாதியின் மனைவியிடமும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்