நெல்லை - மும்பை இடையே புதிய ரயில் சேவை துவக்கம்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

நெல்லை, மே. 4 - நெல்லை, மும்பை இடையே தாதர் சூப்பர் பாஸ்ட் ரயில் சேவை தொடங்கியது. ஆனால் ரயில் பெட்டிகளில் போதிய தண்ணீர் வசதி இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். நெல்லை மாவட்டத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நெல்லையில் இருந்து மும்பை தாதருக்கு வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படும் என்று ரயில்வே துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி நெல்லை, மும்பை தாதர் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கியது. 

மறு மார்க்கத்தில் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் மும்பையில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஞாயிற்றுக் கிழமை நெல்லை வந்தடையும். 1 ம் தேதி காலை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட போது ரயில் பெட்டிகளில் தண்ணீர் வசதி செய்யப்படாததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: