தீவிரவாதிகளின் மிரட்டல்.. வெளிநாடு போனார் பிலாவல் பூட்டோ

சனிக்கிழமை, 4 மே 2013      இந்தியா
Image Unavailable

 

இஸ்லாமாபாத்: மே, - 5 - தீவிரவாதிகளின் கொலை மிரட்டலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும் அந்நாட்டு ஜனாதிபதி சர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோ வெளிநாட்டுக்கு ரகசியமாக சென்றுள்ளார். பாகிஸ்தானில் வரும் 11-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் தலைமையில் சந்திப்போம் என்று அக்கட்சி அறிவித்திருந்தது. ஆனால் சிந்து மாகாணத்தில் அக்கட்சியின் தொண்டர்களிடையே மட்டும்தான் அவர் உரையாற்றினார். வேறு எங்கும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள்வில்லை. கடந்த 23-ந் தேதி கட்சித் தொண்டர்களுக்காக வெளியிட்ட வீடியோ காட்சியில், நானும் நமது நாட்டின் தெருக்களில் இறங்கி நமது கட்சிக்காக பிரசாரம் மேற்கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் எனது தாத்தா பூட்டோ, அம்மா பெனாசிர் ஆகியோரை படுகொலை செய்தவர்கள் என்னையும் அழிக்க நினைக்கிறார்கள்ா என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிலாவல் ரகசியமாக வெளிநாடு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் அவர் எந்த நாட்டில் தலைமறைவாக இருக்கிறார் என்பதை அக்கட்சியின் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர்,தீவிரவாத தாக்குதலுக்கு பெனாசிர் பூட்டோவை இழந்து விட்டோம். பிலாவலின் உயிருக்கு தொடர்ந்து தீவிரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், பிலாவலையும் தீவிரவாதத்திற்கு பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. எனவே, எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிலாவல் பூட்டோ வெளிநாடு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டிற்கு சென்றுள்ளார்? பாகிஸ்தானுக்கு எப்போது திரும்புவார்? என்பது தொடர்பாக இப்போது எதுவும் கூற முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: