முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் களத்துக்கு இம்ரான்கான் தகுதியானவர்: நவாஸ்

செவ்வாய்க்கிழமை, 7 மே 2013      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், மே. 8 - பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் உள்ளிட்ட தலைவர்கள் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்நாட்டு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் வரும் 21 ம் தேதி நடைபெறவுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் பிரிவுக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரரும், முக்கிய எதிர்க்கட்சி தலைவருமான இம்ரான்கானின் கட்சிக்கும் முக்கிய போட்டி நிலவுகிறது. முல்தானில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் பங்கேற்றார். ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் பேசிய நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் கிரிக்கெட் களத்திற்கு தகுதியானவர் என்றும், அரசியல் களத்தில் இருந்து அவர் அகற்றப்பட வேண்டியவர் என்றும் கடுமையாக விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இம்ரான்கானின் தெரிக் இ இன்சாப் கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட அபோடாபாத் நகரில் கடந்த 3 ம் தேதி நடைபெற்றது. உற்சாக வரவேற்புக்கு இடையே இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான்கான் கொள்கை ரீதியான அரசியலை முன்வைத்து புதிய பாகிஸ்தானை உருவாக்கப் போவதாக தெரிவித்தார். 

இதனிடையே கராச்சியில் அவாமி தேசிய கட்சி வேட்பாளர் சதிக்ஜமான் கட்டாக் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொழுகையை முடித்து விட்டு வீடு திரும்பும் வழியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் கண்மூடித்தனமாக கட்டாக் மீது துப்பாக்கி சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் கட்டாக்கின் 6 வயது மகனும் கொல்லப்பட்டான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்