முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா லோக்சபா தொகுதியில் ராகுல் போட்டியா?

சனிக்கிழமை, 11 மே 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மே. 12  - கர்நாடக மாநிலத்தின் லோக்சபா தொகுதி ஒன்றில் காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல் காந்தி போட்டியிடக் கூடும் என காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடக மாநில முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் அறிவித்ததில் ராகுல் காந்தியின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரசைப் பொறுத்தவரையில் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி ஏற்கெனவே கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். ராகுலின் அம்மா சோனியாவும் கூட கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். இதனடிப்படையில் அமேதி தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஏதாவது ஒரு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ராகுல் காந்தியும் இதற்கு ஒப்புதல் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்