முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் ராயல்ஸ் சென்னை சூப்பரை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 13 மே 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜெய்பூர், மே.14 - ஐ.பி.எல். போட்டியில் ஜெய்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ் தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் வித்தி யாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி தரப்பில், வாட்சன் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவ ருக்குப் பக்கபலமாக ஆர். பின்னி மற் றும் டிராவிட் இருவரும் ஆடினர். 

முன்னதாக பெளலிங்கின் போது, கூப்பர், ஆர். பின்னி, பால்க்னர் , வாட்சன் மற்றும் திரிவேதி ஆகியோர் அட ங்கிய கூட்டணி சிறப்பாக பந்து வீசி சென்னை அணியின் ரன் குவிப்பைக் கட்டுப் படுத்தினர். 

ஐ.பி.எல். போட்டியின் 61-வது லீக் ஆட்டம் ஜெய்பூரில் உள்ள சவாய் மா ன்சிங் அரங்கத்தில் பகலிரவு ஆட்டமா க நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற் கு 141 ரன்னை எடுத்தது. 

சென்னை அணி தரப்பில், முரளி விஜய் அதிகபட்சமாக, 50 பந்தில் 55 ரன் எடுத் தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். மை க் ஹஸ்சே 40 பந்தில் 40 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி அடக்கம். தவிர, ஜே.பிராவோ 11 பந்தில் 23 ரன்னையு ம், ஜடேஜா 12 ரன்னையும் எடுத்தனர். 

ராஜஸ்தான் அணி சார்பில், கூப்பர் 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். ஆர். பின்னி 1 விக்கெட் எடுத்தார். வாட்சன், பால்க்னர், மாலிக் மற்றும் திரிவேதி ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

ராஜஸ்தான் அணி 142 ரன்னை எடுத்தா ல் வெற்றி பெறலாம் என்ற இலக்கை சென்னை அணி வைத்தது. அடுத்து கள ம் இறங்கிய அந்த அணி 17.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்னை எடு த்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில், வாட்சன் அதிரடியாக ஆடி 34 பந்தில் 70 ரன் எடு த்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 6 சிக் சர் அடக்கம். ஆர். பின்னி 23 பந்தில் 41 ரன் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற் றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, டிராவிட் 22 ரன்னையும், ரகானே  9 ரன்னையும் எடுத்தனர். 

சென்னை அணி சார்பில், ஹோல்டர் 20 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத் தார். தவிர, மோரிஸ் ஜே. பிராவோ மற்றும் எம். சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்டநாயகனாக வாட்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்