பேரணிக்கு 13 ரயில்கள்: லல்லுவுக்கு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 17 மே 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, மே. 18 - பீகாரில் பிரம்மாண்ட பேரணி நடத்திய ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லல்லுபிரசாத் யாதவை வருமான வரித்துறை நெருக்கி வருகிறது. பேரணிக்கான செலவு விவரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பீகாரில் கடந்த 15 ம் தேதி லாலு பிரசாத் கட்சி சார்பில் மிகப் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதற்காக 13 ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன. 5 ஆயிரம் பேருந்துகளும் வாடகைக்கு எடுக்கப்பட்டன. ரயில்வே துறைக்கு மட்டும் ரூ. 1.11 கோடியை லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் செலுத்தியிருக்கிறது. இது தொடர்பாக தற்போது வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு இதேபோல் நவம்பர் 4 ம் தேதியன்று ஆளும் ஐக்கிய ஜனதா தளம் பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. அதற்கும் ரயில்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு தொகை செலுத்தப்பட்டது. அப்போதும் இதேபோல் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: