முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினி நடிக்கும் ராணா படப்பிடிப்பு துவங்கியது

சனிக்கிழமை, 30 ஏப்ரல் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, ஏப். - 30 - பெரும் பொருட்செலவில் ரஜினி நடிக்கும் ராணா படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. ரஜினியும், தீபிகா படுகோனேயும்  நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது
ரஜினி  மூன்று வேடங்களில் நடிக்கும் புதிய படம் ராணா. இப்படத்தின் கதாநாயகியாக தீபிகா படுகோனே  நடிக்கிறார். இந்தப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார்.
ராணாவின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. வடபழனியில் உள்ள பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த படம் 16 ம் நூற்றாண்டை மையமாக கொண்ட கதை என்பதால் மன்னர் கால உடை அணிந்து ரஜினி வந்தார். ரஜினியும், தீபிகாவும் சாமி கும்பிட்டனர். பின்னர் பஞ்சு அருணாச்சலம் கிளாப் அடிக்க ரஜினி நடித்த முதல் காட்சியை கே.பாலச்சந்தர் இயக்கினார். அதன்பிறகு தீபிகா படுகோனே நடித்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.விழாவில் இதுவரை ரஜினி படத்தில் பணியாற்றிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு துவங்கும் முன் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், ஏ.வி.எம். சரவணன், பஞ்சு அருணாசலம், வாலி போன்றோர் காலை தொட்டு ரஜினி வணங்கினார்.
இந்த படத்தில் மூன்று வேடங்களில் தோன்றும் ரஜினி, நேற்று பெரிய ரஜினி வேடத்தில் நடித்தார். இளைய ரஜினி எந்த வேடத்தில் தோன்றுவார் என்பது தெரிவிக்கப்படவில்லை. வரலாற்று தொடர்புடைய படம் என்பதால் நகைகளுக்கு பிரபல நகைக்கடை ஒன்றை ஒப்பந்தம் செய்துள்ளனர். இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ்கள் அமைக்க ஹாலிவுட்டைச் சேர்ந்த சார்லஸ் டார்வி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிரபல ஹிட் படமான மாட்ரீக்ஸ் படத்திற்கு ஸ்பெஷல் எபெக்ட் அமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. செட்டிங்சை ராஜீவன் அமைக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ராணா படக் குழுவினருக்கு போட்டோ ஒட்டிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். படத்தின் கதாநாயகியான தீபிகா படுகோனே பிரபல பேட்மிண்டன் 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்