முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கார் குண்டு வெடிப்பு: 40 பேர் பலி

திங்கட்கிழமை, 20 மே 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத்,மே.21 - ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் பஸ்ரா ஆகிய நகரங்களில் நேற்று அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர் என்று பாக்தாத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர். 

ஈராக் நாட்டில் குண்டுகள் வெடிக்காத நாளே இல்லை என்று சொல்லலாம். தலைநகர் பாக்தாத்தில் பஸ் நிறுத்தங்கள், சந்தைகள், ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் 9 குண்டுகள் வெடித்தன. இதில் 30 பேர் பலியானார்கள் மற்றும்  நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் எண்ணெய் வளமிக்க பாஸ்ரா நகரில் இரண்டு இடங்களில் கார் குண்டுகள் வெடித்தன. ஒரு கார் குண்டு பஸ் நிறுத்தத்திலும் மற்றொரு குண்டு ஒரு ஓட்டலுக்கு அருகிலும் குண்டுகள் வெடிக்கப்பட்டன. இதில் 10 பேர் பலியானார்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். கடந்த ஒரு வார காலமாக சன்னி மற்றும் ஷியா முஸ்லீம்களை குறிவைத்து குண்டுகள் வெடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்கு எந்த தீவிரவாத இயக்கமும் நேற்றுவரை பொறுப்பு ஏற்காவிட்டாலும் அல்கொய்தா தீவிரவாத இயக்கம்தான் இந்த குண்டுகளை வெடித்திருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. சன்ன முஸ்லீம் பிரிவினர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரிவு முஸ்லீம்கள் அங்கு சிறுபான்மையினர்களாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்