முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதாலாவுக்கு 6 வாரம் இடைக்கால ஜாமீன்

செவ்வாய்க்கிழமை, 21 மே 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே.22 - அரியானா மாநில முன்னாள் முதல் அமைச்சர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு செயற்கை இருதயம் பொருத்துவகற்காக  6 வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கி டெல்லி ஹைகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதார் சவுதாலாவின் மருத்துவ அறிக்கையை பரிசீலித்து  அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டியது உள்ளது. எனவே அவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை நிறுத்தப்படுகிறது. அதாவது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சித்தார்த் மிருதால் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலத்தில் நடந்த 3206 ஆசிரியர் நியமன ஊழலில் இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான 78 வயது  சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சவுதாலாவை ஜாமீனில் விடுவதற்கு ரூ. 5 லட்சம் ரொக்க ஜாமீனிலும், மேலும் அதே தொகைக்கு இருவர் ஜாமீன் பேரிலும்  நிபந்தனை ஜாமீனில் செல்வவதற்கு சிறப்பு கோர்ட்டில் மனு செய்யுமாறு கோர்ட் கேட்டுக்கொண்டதை அடுத்து அவர் மனு தாக்கல் செய்தார். மேலும் அவரது பாஸ்போர்ட்டையும் தாக்கல் செய்யுமாறும், விடுதலையான 24 மணி நேரத்துக்குள் மருத்துவமனையில் சேருமாறும் சவுதாலாவை கோர்ட் கேட்டுக்கொண்டது.

இந்த ஜாமீனில் எதையாவது சவுதாலா மீறினால் அவரது ஜாமீனை  ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ கோரியது.  முன்னதாக மருத்துவக் குழுவை அமைக்குமாறு கோர்ட் கூறியது. அந்தக்குழு அறிக்கையின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சவுதாலாவுக்கு அளித்த 10 ஆண்டு சிறைத்  தண்டனையை எதிர்த்து  ஹைகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கில் சவுதாலாவுக்கும், அவரது மகன் அஜய் சவுதாலா ஆகியோருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவரும் போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஆசிரியர் பணியில் சேர்ந்தனர். ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்