இந்திய எல்லைக்குள் மீண்டும் சீனப் படைகள் ஆக்கிரமிப்பு

திங்கட்கிழமை, 27 மே 2013      அரசியல்
Image Unavailable

லே, மே. 28 - இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவி பின்னர் வாபஸான சீனப் படைகள், நேற்று மீண்டும் ஊடுருவின. இந்திய எல்லைக்குள் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகளை அமைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

சீனப்படைகள் கடந்த ஏப்ரல் மாதம்  இந்தியாவுக்கு சொந்தமான லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து முகாம்களை அமைத்தன. சுமார் 19 கி.மீட்டர் தூரத்துக்கு சீன படைகள் ஊடுருவி நின்றன. இதன் காரணமாக எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சீனாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தின. இந்த நிலையில் இந்த ஊடுருவல் பிரச்சினைக்கு தீர்வுகாம இந்தியா- சீன நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 3 முறை கொடி அமர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் தீர்வுகாணப்படவில்லை. அதனையடுத்து சீனாவின் புதிய  பிரதமர் லீ கெகியாங் இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது லீயும் பிரதமர் மன்மோகன் சிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் எல்லைப்பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது.  இதில் சமரசம் ஏற்பட்டு, சீனா தனது படைகளை வாபஸ் பெற்றுக்கொள்ள சம்மதித்தது. அதன்படி, அத்துமீறி நுழைந்த பகுதியில் இருந்து சீன படைகள் வாபஸ் பெறப்பட்டன. இந்தநிலையில் சீன பிரதமர் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாட்டுக்கு திரும்புவதற்கு முன்பே மீண்டும் சீன படைகள் வாலாட்ட தொடங்கி விட்டன. ஏற்கனவே ஊடுருவிய பகுதியில் இருந்து வாபஸ் பெற்றுச்சென்ற படைகள் மீண்டும் அதே லடாக் பகுதிக்குள் ஊடுருவி கேம்ப் அடித்துள்ளன. அத்துடன் 'ஸ்ரீஜாப்ா பகுதியில் 'பிங்கர்-8 என்ற இடத்தில் இருந்து 'பிங்கர்-6 என்ற இடம்வரை 5 கி.மீட்டர் தூரத்துக்கு 'மெட்டல் சாலையையும் சீன படைகள் அமைத்து உள்ளன. இந்தப்பகுதி தங்கள் நாட்டு எல்லையுடன் சேர்ந்தது என்று சீனா கூறுகிறது. ஆனால், இது லடாக் பகுதியுடன் சேர்ந்த இந்தியப் பகுதிதான் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் வழக்கமான ரோந்துப்பணிகள் மேற்கொள்ளும் இந்தோ- திபெத் எல்லைக் காவல் படையினர் நேற்று சீனா ஊடுருவிய பகுதியில் ரோந்துப் பணிக்காக சென்றனர். அவர்களை சீன படையினர் தடுத்து, திருப்பி அனுப்பி விட்டனர். வழக்கம் போல, இந்த முறையும் மத்திய அரசு மவுனம் சாதித்து வருகிறது. தற்போது ஊடுருவல் செய்துள்ள பகுதி தங்களுக்குதான் சொந்தம் என்று சீன ராணவத்தினர் கூறுகின்றனர். அதற்கு இந்திய ராணுவத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். சீனா தற்போது ஊடுருவியுள்ள சிரிஜாப் பகுதியானது லடாக் பகுதிக்கு சொந்தமானது இந்திய ராணுவத்தினர் கூறி வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு இருநாடுகளுக்கிடையே நடந்த போரின்போது கடும் சண்டை நடந்தது. அந்த பகுதியில் சீன ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட்டது. இந்திய தரப்பில் சிறப்பாக போரிட்டதற்காக மேஜர் தான் சிங் தபாவுக்கு பரம் வீர் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: