முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். டி - 20 பெங்களூர் 26 ரன் வித்தியாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 1 மே 2011      விளையாட்டு
Image Unavailable

பெங்களூர், மே.- 1 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் பெங்களூரில் நடந்த லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 26 ரன் வித்தி யாசத்தில் புனே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் பெங்களூர் அணி தரப்பில், விராட் கோக்லி, கெ ய்ல் மற்றும் டிவில்லியர்ஸ் மூவரும் நன்கு பேட்டிங் செய்து அணி கெளரவமான ஸ்கோரை எடுக்க உதவினர். தில்ஷான் மற்றும் எஸ். திவாரி இருவரும் அவர்களுக்கு பக்கபலமாக ஆடினர். பின்பு பெளலிங்கின் போது, ஏ.சி.தாமஸ் மற்றும் ரோகித் சர்மா இரு வரும் நன்கு பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினர். டெய்லர் அவர்களுக்கு ஆதரவாக பந்து வீசினார்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் பெங்களூரில் உள்ள எம்.ஏ. சின்னசாமி அரங்கத்தில் 35 -வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கேப்டன் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் அணியும், கேப்டன் யுவராஜ் சிங் தலைமையிலான புனே வாரியர்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற புனே வாரிய ர்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பெங்களூர் அணி தரப்பில், கிறிஸ் கெய்ல் மற்றும் தில்ஷான் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்ண யிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 181 ரன்னைக் குவித்த து. அந்த அணி சார்பில் ஒரு வீரர் அரை சதமும், 2 வீரர்கள் கால் சதமு ம் அடித்தனர்.
பெங்களூர் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விராட் கோக்லி அதிகபட்சமாக, 42 பந்தில் 67 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர்  அடக்கம். இறுதியில் அவர், தாமஸ் வீசிய பந்தில் ஹர்பிரீத் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்தபடியாக, துவக்க வீரர் கெய்ல் 26 பந்தில் 49 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். அவர் 1 ரன்னில் அரை சத வாய்ப்பை இழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. தவிர, டிவில்லியர்ஸ் 26 ரன்னையும், தில்ஷான் 15 ரன்னையும், எஸ். திவாரி 14 ரன்னையும் எடுத்தனர்.
புனே வாரியர்ஸ் அணி சார்பில், ஏ.சி.தாமஸ் 23 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். ரோகித் சர்மா 27 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, டெய்லர் 1 விக்கெட் எடுத்தார்.
புனே வாரியர்ஸ் அணி 183 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பெங்களூர் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங் கிய அந்த அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 155 ரன்னை எடுத் தது.
இதனால் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த லீக் ஆட்டத்தில் 26 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 வெற்றிப் புள்ளிகள் கிடைத்தது.
புனே வாரியர்ஸ் அணி தரப்பில், துவக்க வீரர் ரைடர் மற்றும் கேப்ட ன் யுவராஜ் இருவரும் அதிரடியாக ஆடி ரன் எடுத்தனர். இருந்த போதி லும் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.
துவக்க வீரர் ரைடர் அதிகபட்சமாக, 34 பந்தில் 51 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். யுவராஜ் சிங் 23 பந்தில் 41 ரன்னை எடுத்தார். தவிர, ராபின் உத்தப்பா 17 பந்தில் 23 ரன்னையும், பாண்டே 23 பந்தில் 19 ரன்னையும் எடுத்தனர்.
பெங்களூர் அணி சார்பில், கெய்ல் 8 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். தவிர, ஜாஹிர்கான், வெட்டோரி, எஸ். அரவிந்த் மற்றும் சையது மொகமது ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக விராட் கோக்லி தேர்வு செய்யப்பட்டார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்