முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்பாட் பிக்சிங்கில்: சித்தார்த் திரிவேதி கோர்ட்டில் சாட்சியம்!

சனிக்கிழமை, 1 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 2 - ஐ.பி.எல். ஸ்பாட் பிக்ஸிங்கில் பங்கேற்க மறுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் சித்தார்த் திரிவேதி டெல்லி நீதிமன்றத்தில் அரசு தரபு சாட்சியாக சாட்சியமளித்தார். ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங்கில் ்ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கித் சவான், அஜித் சண்டிலா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களை தொடர்ந்து இந்தி நடிகர் விண்டு தாராசிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் மற்றும் புக்கிகல் என நாடு முழுவதும் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிக்சிங் வழக்கில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மற்றொரு வீரரான சித்தார்த் திரிவேதி அரசு தரப்பு சாட்சியானார். அவர் ஐ.பி.எல் பிக்சிங்கில் பங்கேற்க மறுத்தவர். அவர் டெல்லி சாகேத் நீதிமன்றத்தில் ஒரு மாஜிஸ்திரேட் முன்பு ஆஜரானார். குற்றவியல் நடைமுறை சட்டம் 164 வது விதியின்கீழ் வாக்குமூலம் அளித்தார். கைதான வீரர்கள் ஸ்ரீசாந்த், சண்டிலா, சவான் மற்றும் சூதாட்ட புக்கிகள் பற்றியும், அவர்களுடனான சந்திப்புகள் பற்றியும் அவர் முக்கிய தகவல்களை தெரிவித்தார். சித்தார்த் திரிவேதியை கடந்த 2010 ம் ஆண்டில் இருந்தே புக்கிகள் துரத்தியுள்ளனர். தற்போது கைதான முன்னாள் வீரர் அமித்சிங்கும் அணுகினார். கடந்த 2010-ம் ஆண்டு சண்டிகாரில் ஒரு போட்டியின் போது, சித்தார்த் திரிவேதியை தீபக் குமார் உள்ளிட்ட புக்கிகள் சந்தித்தனர். அவருக்கு ஆடைகள், வாசனை திரவியங்கள் போன்ற பரிசுப் பொருட்களை வழங்கினர். அடுத்த ஆண்டில் புக்கில் சுனில் பாட்டியா அணுகினார். தொடர்ந்து 2012 மற்றும் 2013 ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளிலும் சித்தார்த்தை புக்கிகளும் அஜித் சண்டிலாவும் பிக்சிங்கில் ்ஈடுபட ஆனால் அவர் மறுத்து விட்டார். தரகர்கள் ஏற்பாடு செய்த விருந்திலும் பங்கேற்க மறுத்து விட்டார் இந்த விவரங்கள் அனைத்தையும் அவர் நீதிமன்றத்தில் சித்தார்த் திரிவேதி தெரிவித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 

குருநாத் மெய்யப்பன் போலீஸ் காவல் நீட்டிப்பு இதனிடையே போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன், இந்தி நடிகர் விண்டு தாராசிங் மற்றும் இருவர் மும்பை கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் போலீஸ் காவலை மேலும் நீட்டிக்குமாறு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட மாஜிஸ்திரேட் ஏ.ஏ.கான், அவர்களின் போலீஸ் காவலை மேலும் 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்