முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் அமீர்கானை சந்திக்க பில்கேட்ஸ் விருப்பம்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      சினிமா
Image Unavailable

நியூயார்க், ஜூன். 3  - மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் பாலிவுட் நடிகர் ஆமீர் கானை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் ஆமீர் கானுக்கு வயது ஆக ஆக அவரது புகழும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று தான் கூற வேண்டும். பர்பக்ஷனிஸ்ட் என்று அழைக்கப்படும் அவரை சந்திக்க பல பிரபலங்களும் ஆர்வமாக உள்ளனர். இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸும் சேர்ந்துள்ளார். கேட்ஸ் தனது பிளாக்கில் இது குறித்து எழுதியிருப்பதாவது, பாலிவுட் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆமீர் கானை சந்திக்க ஆவலாக உள்ளேன். யுனிசெப் அம்பாசடராக இருக்கும் அவரது பணிகள் குறித்து கேட்டறிய விரும்புகிறேன். அவரது டி.வி நிகழ்ச்சியான சத்யமேவ ஜெயதே குறித்து அறிய ஆவலாக இருக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்