முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை அமலுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூன் 2013      வர்த்தகம்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூன்.3 - முறைகேடுகளை தடுக்கவும் உள்நாட்டு தயாரிப்புக்கு முக்கியத்வம் அளிக்கவும் வகை செய்யும் புதிய ராணுவ தளவாட கொள்முதல் கொள்கை அமலுக்கு வந்தது. இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது,

பாதுகாப்பு துறைக்கான ராணுவ தள்வாட கொள்முதல்கொள்கை 2013 ஜூன் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்ன் படி தளவாட கொள்முதல் தொடர்பான் ஒப்பந்தபுள்ளி நடவடிக்கைகள் வெளிப்படையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கும். ராணுவ தளவாட்ங்களை உள்நாட்டில் தயாரிப்பதை ஊக்குவிக்கவும், கொள்முதல் நடவடிக்கையின் போது உள்நாட்டு தயாரிப்புக்கு  முக்கியத்வம் அளிக்கவும் இதில் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் துறையினர் பயன்பெறுவர் என் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறுகையில் இந்த புதிய கொள்கை பாதுகாப்புத் துறைக்கும் தொழில் துறையினருக்கும் மிகவும் ப்யனுள்ள்தாக இருக்கும். ராணுவ தளவாட கொள்முதல் நடவடிக்கைகளை விரைவாக முடிக்கும் வகையில் அத்ற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. இதனால் காலதாமதம் தவிர்க்கப்படும். என்றார். 

சமீபத்தில் அம்பலமான ஹெ  லிகாப்டர் பேர ஊழல் போன்ற முறைகேடுகளை தடுக்கவும் இந்த புதிய கொள்கை உதவும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

பாதகாப்புத்துறையை மேலும் பலப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்ககப்பட்டு வருவதாகவும் சம்பந்தப்பட்ட வர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்