முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஸ்டோரியஸ் மீதான வழக்கு ஆக.-19-க்கு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

ஜோகன்ஸ்பர்க், ஜூன்.5 - காதலர் தினத்தன்று தனது காதலியை சுட்ட பிரபல விளையாட்டு வீரர் பிஸ்டோரியஸ் மீதான வழக்கை ஆகஸ்ட் மாதம் 19-ம்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.    பிப்ரவரி மாதம் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். குளிக்கும் அறையில் நின்ற தனது காதலி ரீனாமீது துப்பக்கியால் சுட்டதை அவர் ஒப்புக்கொண்டார். யாரோ ஒருவர் இடையில் வந்ததால்தான் பிஸ்டோரியஸ் தற்காப்புக்காக சுட்டார் என்று அவரது வழக்கறிஞர் வாதாடினார். இவர் குளிக்கும் அறையின் கதவு மீது சுட்டதாகவும், கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டதாகவும் அரசுத் தரப்பு இவர் மீது குற்றம் சாட்டியது. 

இந்த வழக்குத் தொடர்பாக குறிப்புகள் தயார் செய்ய சிறிது கால அவகாசம் வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.  2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற இவர்  அந்த போட்டி முடிவில் தென் ஆப்பிரிக்காவின் தேசியக் கொடியுடன் பவனி வந்தார்.

இவர் மீதான கொலைக் குற்றச்சாட்டு மற்றும் இவர் கைது செய்யப்பட்டது குறித்து லட்சக்கணக்கான இவரது விசிறிகள் அதிர்ச்சி அடைந்தனர். இவர் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கருப்பு, வெள்ளை யர்களின் ஹீரோவாக திகழ்ந்தார். இவருக்கு ஜாமீன் கொடுக்கப்படாத காலத்தில் இவர் எவர் கண்ணிலும் தட்டுப்படாமல் ஒதுங்கி வாழ்ந்து வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்