லாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன். 7 - மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன்(15). அவர் தனது கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த அவர் குடும்பத்தினர் அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலமாகி விடுவார் என்று கூறப்படுகிறது. அவர் தனது ட்விட்டரில், கண்ணீர் ஏன் உப்பாக இருக்கிறது? என் துன்பங்கள் எல்லாம் வெகுதூரம் சென்றது போன்று உள்ளது. அவை எல்லாம் இங்கே இருக்க வந்தது போன்று தெரிகிறது என்று தெரிவித்துள்ளார். மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009 ம் ஆண்டு ஜூன் மாதம் இறந்தார். அவருக்கு பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட் ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.
- காரமடை அரங்கநாதர் குதிரை வாகனத்தில் வாண வேடிக்கையுடன் புறப்பாடு.
- திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் தீர்த்தம். தங்க தோலுக்கினியானில் பவனி.
- காங்கேயம், திருப்போரூர் இத்தலங்களில் முருகப்பெருமான் விடையாற்று உற்சவம்.
- கோயம்புத்தூர் கோணியம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.
- நத்தம் மாரியம்மன் பாற்குடக்காட்சி.
- திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலை ஏனாதி சுவாமிகள் குருபூஜை.