ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் ராஜ்குந்த்ரா சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12 - ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ராவை கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. 

ஐ.பி.எல். சூதாட்ட முறைகேட்டில் சிக்கிய ஸ்ரீசாந்த், அஜித் சாண்டிலா, அங்கீத் சவாண் ஆகிய மூன்று கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இது தவிர சென்னை அணியின் கவுரவ உறுப்பினர் குருநாத் மெய்யப்பன் சூதாட்ட தரகர்கள் என்று மொத்தம் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனிடையே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ராவுக்கு சூதாட்டத்தில் தொடர்பு இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து அவரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போதுதான் சூதாட்டத்தில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டார். எனவே அவர் மீது பி.சி.சி.ஐ. என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற கேள்வி எழுந்தது. 

இந்நிலையில் பி.சி.சி.ஐ. யின் அவசர செயற்குழு கூட்டம் இடைக்கால தலைவர் ஐக்மோகன் டால்மியா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் இறுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ்குந்த்ராவை கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் குருநாத் மெய்யப்பன் மற்றும் சென்னை அணி குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதிகள் ஜெயராம், பாலசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய குழுவே குந்த்ரா மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீதான புகாரையும் விசாரிக்கும் என்றும் பி.சி.சி.ஐ. கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: