அத்வானி ராஜினாமா பற்றிய செய்திகளுக்கு மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.12  ற- ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நெருக்குதல் காரணமாகவே அத்வானி ராஜினாமா செய்துள்ளார் என்று கூறப்படுவதை பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மறுத்துள்ளார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

அத்வானி ராஜினாமா செய்தது தொடர்பாக வரும் செய்திகள் ஆதாரமற்றவை. நான் ஒன்றை மட்டும் தெளிவாக்க விரும்புகிறேன். அதாவது ஆர்.எஸ்.எஸ்.தான் இதுபோன்று செய்துள்ளது என்று 

டெலிவிஷனில் ஒளிபரப்பான செய்திகள் தவறானவை. அவை அத்தனையும் உண்மைக்கு மாறானவை. ஆர்.எஸ்.எஸ்.இதுபோன்று எதையும் சொல்லவில்லை என்பதுதான் உண்மை.

இதுபற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டேன். நீங்கள் ஏதாவது அறிக்கை அல்லது பேட்டி கொடுத்தீர்களா என்று கேட்டபோது அவர்கள் இதுபோன்று பேட்டி எதுவும் கொடுக்கவில்லை என்று கூறினர். இப்படி வந்துள்ள செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை.

இந்த பிரச்சனை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் , பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார் என்று செய்திகள் வந்துள்ளன இதுவும் தவறாகும் என்றார் ராஜ்நாத்சிங்.

குஜராத் முதல்வர் நரேந்கிர மோடியை பிரச்சார குழு தலைவராக நியமித்ததிலிருந்து பின்வாங்கப்போவதில்லை என்று பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் முடிவு செய்துள்ளதாத செய்திதள்தெரிவித்தன.

அத்வானிக்கு உரிய மரியாதை தரப்படவேண்டும். அவரை சமாதானம் செய்து அவரது ராஜினாமாவை திரும்பப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: