Idhayam Matrimony

மாவோயிஸ்டு பகுதிகளில் அரசியல் நடவடிக்கை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 12 - மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ள பகுதிகளில் அரசியல் நடவடிக்கைகள் பாதிக்காத வகையில் உகந்த சூழலை ஏற்படுத்த அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது, 

சத்தீஸ்கரில் நிகழ்ந்த மாவோயிஸ்டு தாக்குதல் நமது நாட்டின் ஜனநாயக அடித்தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறுவதில் தவறில்லை. பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக அரசியல் நடவடிக்கைகள் தடைபட்டால் ஜனநாயக சக்திகளின் வீரியம் குறைந்து விடும். சத்தீஸ்கரில் நடந்த தாக்குதல் மூலம் முதன்முறையாக ஒரு அரசியல் கட்சியின் உயர்நிலை தலைவர்களை நக்சல்கள் குறி வைத்தனர் என தெரிகிறது. மாவோயிஸ்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அமைதியான அரசியல் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நக்சல்களை ஒடுக்குவதற்கு தேவையான சூழலை உருவாக்க வேண்டும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago