விண்ணப்பிக் காதவருக்கு ஒபாமா படத்துடன் ஹால் டிக்கெட்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

ஜெய்பூர், ஜூன். 12 - ராஜஸ்தானில் பள்ளி உரிமையாளர் ஒருவருக்கு மத்திய அரசு நடத்தும் ஜூனியர் என்ஜினியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புகைப்படம் இருந்துள்ளது. இதில் விந்தை என்னவென்றால் அவர் இந்த தேர்வுக்கு அவர் விண்ணப்பிக்கவே இல்லையாம்.

 ராஜஸ்தான் மாநிலம் தெளசா மாவட்டம் ராம்பாஸ் கிராமத்தில் பள்ளி ஒன்றை வைத்து நடத்தி வருபவர் லாலு ராம் மீனா(40). அவருக்கு கடந்த 8ம் தேதி கடிதம் ஒன்று வந்தது. அதை பிரித்துப் பார்த்த அவர் அதிர்ந்து போனார். காரணம் மத்திய அரசின் ஸ்டாடிப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் ஜூனியர் என்ஜினியர்களுக்கான தேர்வுக்கான ஹால் டிக்கெட் வந்திருந்தது. அதில் அவரது பெயர் தெளிவாக இருந்தது. அவருக்கு பதர்பூரில் உள்ள துக்லகாபாத் மெட்ரோ நிலையத்திற்கு அருகில் உள்ள மையத்தில் தேர்வு எழுத வேண்டும் என்று இருந்தது. அந்த ஹால் டிக்கெட்டில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் புகைப்படம் இருந்தது. தான் விண்ணப்பிக்காத தேர்வுக்கு ஒபாமா புகைப்படத்துடன் கூடிய ஹால் டிக்கெட் வந்ததில் ராம் அதிர்ச்சி அடைந்தார். அவரது பிறந்தநாள் 01-01-1973 ஆகும். ஆனால் ஹால் டிக்கெட்டில் 05-10-1987 என்று இருந்தது. இது குறித்து ராம் கூறுகையில், நான் அந்த பதவிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கவே இல்லை. அப்படி இருக்கையில் ஹால் டிக்கெட் வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒபாமா புகைப்படத்திற்கு கீழ் ஒரு கையெழுத்து இருந்தது. அது என்னுடையது இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: