முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவேன்: ஸ்ரீசாந்த்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2013      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, ஜூன். 14 - நான் தவறு செய்யவில்லை என்பதை நிரூபித்து மீண்டும் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடுவேன் என்று ஸ்ரீசாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீசாந்த் 27 நாள்கள் சிறைவாசத்துக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து தனது சொந்த மாநிலமான கேரளத்துக்கு வந்தார். தனது பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, 

பெற்றோரிடம் திரும்பி வந்தது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் எனது பயிற்சியை தொடங்குவேன். கிரிக்கெட் விளையாடுவதுதான் எனது கனவு. கிரிக்கெட்டுக்கு வந்த முதல் நாளில் இருந்து சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறேன். என்னை நீங்கள் நம்ப வேண்டும். நீதித்துறை மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன். தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாட ஆவலுடன் உள்ளேன். ஆனால் அது குறித்து தற்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்றார். 

ஐ.பி.எல். ஸ்பாட் பிக்சிங் குறித்த கேள்விக்கு நான் தவறு செய்யவில்லை. வெறும் குற்றச்சாட்டினால் நான் கைது செய்யப்பட்டேன். இதில் இருந்து விரைவில் வெளிவருவேன். நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன் என்றார். எனக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளித்தனர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார். திகார் சிறை அனுபவம் குறித்த கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்து விட்டார். 

ஸ்பாட் பிக்சிங் குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மற்றொரு வீரர் அங்கீத் சவாண் கூறுகையில், கஷ்டமான காலத்தில் என்னுடன் இருந்த பெற்றோர் நண்பர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அதனால் சரியான தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். தனது திருமணத்துக்காக சில நாட்களுக்கு முன்னர் சவாண் ஜாமீனில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்