முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடிக்கு விசா மறுப்பு: யு.எஸ். பார்லி. குழுவில் விவாதம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

வாஷிங்டன், ஙீஜூன். 16 - குஜராத் முதல்வர் நரேந்திரமோடிக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிற விவகாரம் குறித்து அமெரிக்க பார்லிமென்ட் குழுவில் விவாதிக்கப்பட்டது. குஜராத்தில் கடந்த 2002 ம் ஆண்டு ஏற்பட்ட மத கலவரத்தை சுட்டிக் காட்டி நரேந்திர மோடிக்கு அமெரிக்கா தொடர்ந்து விசா வழங்க மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க பார்லிமென்ட் குழுவின் முக்கிய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.பி. சிதியா லும்மிஸ், மோடிக்கு விசா மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினார். இதைத் தொடர்ந்து மோடிக்கு விசா மறுக்கப்படுவதை கண்டித்தும், ஆதரித்தும் குரல்கள் எழுந்தன.

சர்வதேச மத விவகாரங்களுக்கான அமெரிக்க ஆணையத்தின் தலைவர் காத்ரினா லாண்டோஸ் ஸ்வெட் பேசுகையில், அமெரிக்க சட்டப்படி அவர் குற்றம் செய்திருப்பார் என யூகித்து அந்த அடிப்படையில் தண்டிப்பது என்பது பொருத்தமாக இருக்காது என்றார். அதேபோல் மோடி இந்தியாவின் பிரதமராகி விட்டால், அதை அமெரிக்கா கூர்ந்து கவனிக்க வேண்டும் என்றும் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்