முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யமுனையில் வெள்ளம் அபாயத்தை தாண்டிச் செல்கிறது

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஜூன்.21 - உத்தரகாண்ட் மாநிலத்தில் யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு  அதிகமாக உள்ளது. யமுனையில் வெள்ளம் அபாய குறியீட்டைத்  தாண்டிச் செல்கிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கினால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து யமுனை நதி அருகே உள்ள 30 கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வேறு இடங்களுக்குச் செல்ல தயாராக இருக்குமாறு அந்த 30 கிராம மக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கிராம மக்கள் தங்குவதற்கு வசதியாக ஆரம்பப் பள்ளி கட்டிடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாட்டுத் தொழுவங்களும் தயார் நிலையில் உள்ளன என்று செய்திகள் தெரிவித்தன.

யமுனை நதியில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துக்கொண்டே சென்றது. நேற்று வெள்ளம் அபாயக் குறியீடான 207.20 மீட்டரைத் தாண்டி சென்றது. 1978-ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் இதுபோன்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது 207.7 மீட்டராகலாம் என்று எதிர்பார்ப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். யமனையில் அதிக அளவு வெள்ளம் செல்வதால் 145 ஆண்டு பழமை வாய்ந்த ரயில்வே பாலம் மூடப்பட்டது. அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த 2000 குடும்பத்தினர் வேறு பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றனர். யமுனை நதியின் சீற்றம் இன்னும் தணியவில்லை.

யமுனை நதியில் நீராடக்கூடாது என்று மக்களை மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் வடக்கு டெல்லியில் உள்ள மஞ்சுகா தில்லா அருகே குளித்த ஒருவர் நீர்ச்சுழலில் சிக்கி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என்று டெல்லி அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.                       

யமுனையில் வெள்ளப் பெருக்கு அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் வெள்ளச் சேதத்தை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த நிலையில் 8.06 லட்சம் கன அடி தண்ணீரை அரியானா மாநிலத்திலிருந்து திறந்து விட்டுள்ளனர். எனவே வெள்ளப் பெருக்கு அதிகரித்து அபாயக் குறியீட்டைத் தாண்டி செல்கிறது. 

தற்போது மழை பெய்யவில்லை. எனவே இனிமேல் வெள்ள அபாயம் இருக்காது என்று அரசு அதிகாரிகள் நிம்மதிபெருமூச்சு விட்டனர். மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க 62 படகுகள் இந்த பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளன. வட மாநிலங்களில் வெள்ளப் பெருக்கு அதிகமாக உள்ளது. யமுனை நதியில் வெள்ளம் அபாயக் குறியீட்டுக்கு மேல் செல்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்