முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் வெள்ளம்: ஆயிரக் கணக்கானோர் பலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2013      இந்தியா
Image Unavailable

 

கேதார்நாத், ஜூன்.21  - உத்தரகாண்டில் மழை வெள்ளத்தால் யாத்திரிகர்களுக்கு பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவால் சேற்றில் கூட்டம் கூட்டமாக புதைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்களில், கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கனமழையால் ஆறுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது பருவமழையின் போது பெய்யும் மழையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இந்த மழை வெள்ளத்தால் ஏராளமான பகுதிகள் மூழ்கியுள்ளன ஆங்காங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக வீடுகள் இடிந்துள்ளன. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டது. அலக்நந்தா ஆற்றின் கரையோரம் இருந்த 40 ஓட்டல்கள் உட்பட 73 கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. உத்தரகாண்டில் 200 கார்கள் 2 மண் அள்ளும் பிரம்மாண்ட இயந்திரங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. காரையோரம் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் ஹெலிகாப்டரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

வட இந்தியாவில் பருவ மழை துவங்கிய உடனே கன மழையாக உள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கங்கை, யமுனை, மந்தாகினி ஆகிய ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் ஓடுகிறது. கன மழையால் உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியானா, டெல்லியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கன மழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆங்காங்கே சிக்கித் தவித்து வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ள முடியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்