முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

24 லாரிகளில் நிவாரண பொருட்கள்: சோனியா அனுப்பி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 25 ஜூன் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 26 - உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக டெல்லியில் இருந்து 24 லாரிகளில் நிவாரண பொருட்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைத்தது. டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமையக வாயிலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும் கொடியசைத்து அந்த வாகனங்களை அனுப்பி வைத்தனர். அவற்றில் முதலுதவிக்கான மருந்துகள், கம்பிளி போர்வைகள், உடைகள் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ப. சிதம்பரம், ஆஸ்கர் பெர்னான்டஸ், டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித், காங்கிரஸ் பொதுச் செயலர் அஜய் மக்கான், அம்பிகாசோனி, அகமது பட்டேல், டெல்லி காங்கிரஸ் தலைவர் ஜெய் பிரகாஷ் அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

உத்தரகாண்ட் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்காக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஏற்கனவே 124 லாரிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதை தொடர்ந்து நிவாரண பொருட்கள் விநோயகத்தை அம்பிகா சோனியும், காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோராவும் சில நாட்களுக்கு முன்பு நேரில் பார்வையிட்டனர். பின்னர் டெல்லி திரும்பிய இருவரும் கூடுதலாக நிவாரண பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று சோனியா காந்தியிடம் முறையிட்டனர். 

இதையடுத்து மேலும் 24 லாரிகளில் நிவாரண பொருட்களை தற்போது காங்கிரஸ் கமிட்டி அனுப்பி வைத்துள்ளது. நிவாரண பொருட்கள் விநியோகத்தை பார்வையிடுவதற்காக டேராடூனில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன் பணிகளை காங்கிரஸ் அகில இந்திய செயலர் சஞ்சய் கபூர், கட்சியின் சேவா தள தலைவர் மகேந்திர ஜோஷி ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்