முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காடுவெட்டி குரு மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

வியாழக்கிழமை, 4 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை 5 - காடுவெட்டி குரு மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாமக சட்டமன்ற உறுப்பினர் குரு உள்ளிட்ட அக்கட்சியைச் சேர்ந்த 20 பேர் மீது, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று முன்தினம் ரத்து செய்தது.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியது, பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது, வன்முறையை தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் குருவை மீண்டும் கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  செ.விஜயகுமார் பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் குருவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் மீண்டும் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு காஞ்சிபுர மாவட்ட கண்காணிப்பாளர்   செ.விஜயகுமார்  மூலம், குரு சிறை வைக்கப்பட்டுள்ள புழல் சிறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு மாமல்லபுரத்தில் நடந்த சித்திரா பெளர்ணமி திருவிழாவில்  முதல்வரை அவதூறாக பேசியதாக ஏற்கனவே குரு கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் குரு மீண்டும் கைது செய்யப்பட்டதற்கு அந்த கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு மீது வழக்கு தொடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony