இலங்கை வடமாகாண சபை தேர்தலை நடத்த ராஜபக்சே உத்தரவு

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜூலை. 7 - இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்த அந்நாட்டு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவுக்கு அதிபர் மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார். இலங்கையில் வடக்கு மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்பது இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கோரிக்கையாகும். இந்நிலையில் தமிழருக்கு எந்த வகையிலும் அதிகாரத்தை கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் மகிந்த ராஜபக்சே, அரசியல் சாசனப் பிரிவு 13 ல் திருத்தம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால் இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

இந்நிலையில் செப்டம்பர் மாதம் வடக்கு மாகாண சபை தேர்தலை நடத்த மகிந்த ராஜபக்சே அதிகாரப்பூர்வமாக உத்தரவிட்டிருக்கிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரியாவுக்கு தமது கையெழுத்திட்ட கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார். கடந்த கால் நூற்றாண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாண சபைக்கு தேர்தல் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலுடன் வடமேல் மாகாணசபை, மத்திய மாகாணசபை ஆகியவற்றுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இதற்காக இந்த இரண்டு மாகாண சபைகளும் நள்ளிரவுடன் கலைக்கப்பட்டன.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: