புத்த கயா குண்டு வெடிப்புக்கு மோடி காரணமா? பா.ஜ.க மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 9 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூலை. 10 - புத்த கயா குண்டுவெடிப்பில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்புள்ளது என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜயசிங் கூறிய குற்றச்சாட்டை பா.ஜ.க மறுத்துள்ளது. பீகார் முதல்வர் நிதீஷ்குமாருக்கு பா.ஜ.க தொண்டர்கள் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று மோடி பேசினார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று மோடியின் விசுவாசி அமீத்ஷா கூறினார். இதற்கு அடுத்த நாளில் பீகாரின் புத்த கயாவில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன. இந்த சம்பவங்களுக்கு இடையே தொடர்பு உண்டா என்று டுவிட்டர் இணையதளத்தில் திக்விஜயசிங் கேள்வி எழுப்பி இருந்தார். 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, இல்லாத விஷயங்களை எல்லாம் கற்பனை செய்து பேசுவது திக்விஜயசிங்கின் வழக்கமாகி விட்டது. புத்த கயா தொடர் குண்டுவெடிப்பை முக்கிய பிரச்சினையாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் கலாச்சாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகவும் மதங்களிடையே உள்ள ஒற்றுமையை குலைக்கும் பயங்கரவாதிகளின் முயற்சியாகவும் இதனை கருத வேண்டும் என்றார் அவர். திக்விஜயசிங் கூறுவதை எல்லாம் கருத்தில் கொள்ள தேவையில்லை. அவர் தன்னிலை இழந்து இவ்வாறெல்லாம் கூறி வருகிறார் என்று பா.ஜ.க. பொது செயலாளர் அனந்தகுமார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: