முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரப்பிரதேசத்தில் பலத்த மழை வெள்ளத்தில் 116 பேர் சாவு

புதன்கிழமை, 10 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

லக்னோ, ஜூலை.11 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ள நிலவரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. அதாவது வெள்ளப் பெருக்கு அதிகமாகியுள்ளது. கடுமையான வெள்ளத்தால் 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாரதா, காக்ரா, சரயு ஆகிய ஆறுகளில் வெள்ளம் அபாயக் குறியீட்டைத் தாண்டிச் செல்கிறது. இதனால் பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. 

மக்களும், கால்நடைகளும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் ராணுவத்தினர் இதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

முன்பு எப்போதும் இல்லாதஅளவில் லட்சுமிப்பூர், சித்தார்த்நகர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. லக்னோ அருகிலுள்ள  பாரபங்கி என்ற இடத்தில் உள்ள ஆல்ஜின் பாலத்தில், காக்ரா ஆற்றில் வெள்ளம் அபாய குறியீட்டுக்கு மேல் 2 மீட்டர் உயரத்தில் பெருக்கெடுத்து ஒடுவதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சரயு ஆற்றிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலத்த மழை, மின்னல் காரணமாக 4 பேர் இறந்தனர். வெள்ளம் காரணமாக விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன என்று துயர் துடைப்பு கமிஷனர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்