எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூலை.11 - முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொட ரில் போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி 81 ரன் வித்தியாசத்தில் (டக்வொர்த் லீவிஸ் முறைப்படி) இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியின் போது, மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறை கடைபிடிக்கப்பட்டது. இதனால் மொத்த ஓவர்கள் குறைக்கப்பட்டன.
இந்திய அணி தரப்பில், ரோகித் சர்மா அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக் குப் பக்கபலமாக, கேப்டன் விராட் கோக்லி மற்றும் தவான் ஆகியோர் ஆடினர்.
பின்பு பெளலிங்கின் போது, முன்னணி வேகப் பந்து வீச்சாளரான புவனேஷ்வ ர் குமார் சிறப்பாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டைக் கைப்பற்றினார். அவரு க்கு ஆதரவாக இஷாந்த் சர்மா, ஜடே ஜா, உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர்.
முத்தரப்பு ஒரு நாள் தொடரின் கடைசி மற்றும் 6 -வது லீக் ஆட்டம் டிரினி டாட் தீவில் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் உள்ள குவீன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தி யா மற்றும் இலங்கை அணிகள் மோ தின.
முதலில் களம் இறங்கிய இந்திய அணி 29 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்னை எடுத்து இருந்த போது மழை பெய்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
அப்போது, ரோகித் சர்மா அதிகபட்ச மாக, 83 பந்தில் 48 ரன்னை எடுத்து இறு திவரை ஆட்டம் இழக்காமல் இருந்தா ர். இதில் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
கேப்டன் கோக்லி 52 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி அடக்கம். தவிர, தவான் 15 ரன்னையும், கார்த்திக் 12 ரன்னையும் எடுத்தனர்.
இலங்கை அணி சார்பில், முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஹெராத் 32 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட்எடுத் தார். தவிர, மேத்யூஸ் 1 விக்கெட் எடுத் தார்.
இடையே மழை பெய்ததால் டி.எல். முறைப்படி இலங்கை அணி 26 ஓவரில் 178 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் அடுத்து களம் இறங்கிய இல ங்கை அணி இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. இறு தியில் அந்த அணி 24.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 96 ரன்னி ல் சுருண்டது.
இதனால் இந்த கடைசி லீக் ஆட்டத்தி ல் இந்திய அணி 81 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இறுதிச் சுற்றுக் குள் நுழைந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 5 புள்ளிகள் கிடைத்தது.
இலங்கை அணி தரப்பில் சண்டிமால் அதிகபட்சமாக, 54 பந்தில் 26 ரன் எடுத் தார். இதில் 1 பவுண்டரி மற்றும் 1 சிக் சர் அடக்கம். தவிர, அஜந்தா மெண்டி ஸ் 13 ரன்னையும், ஜெயவர்த்தனே 11 ரன்னையும், கேப்டன் மேத்யூஸ் 10 ரன் னையும் எடுத்தனர்.
இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்து வீசினார். அவர் மொத்தம் 6 ஓவர்கள் வீசி 8 ரன்னைக் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டைக் கை ப்பற்றினார். தவிர, இஷாந்த் சர்மா மற் றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டும், யாதவ் மற்றும் அஸ்வின் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக புவனேஷ்வர் குமார் தேர்வு செய்யப்பட்டார்.
செல்கான் மொபைல் கோப்பைக்கான இந்த முத்தரப்பு ஒரு நாள் தொடரில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இறுதிச் சுற்றில் மோத உள்ளன. மே.இ.தீவு அணி வெளியேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025