முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன் சிங்குடன் முலாயம் சிங் சந்திப்பு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2013      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.12 - மத்திய அரசு கொண்டுவந்துள்ள உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு சமாஜ்வாடி கட்சி எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில் அக்கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மன்மோகன் சிங் அரசுக்கு முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இருப்பினும் காங்கிரஸ் அரசை முலாயம்சிங் விமர்சிக்க தவறுவதில்லை. உணவு பாதுகாப்பு சட்டத்தைக்கூட இவரது கட்சி எதிர்க்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று பிரதமரை அவரது இல்லத்தில் முலாயம் சிங் யாதவ் சந்தித்து சுமார் அரைமணி நேரம் பேசிக்கொண்டியிருந்தார். பிறகு அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் புறப்பட்டு சென்றுவிட்டார். பின்னர் வெளியில் வந்த முலாயம் சிங்கிடம் இந்த சந்திப்பின் நோக்கம் பற்றி கேட்டபோது டீ குடிக்க வந்தேன் என்று கிண்டலாக தெரிவித்தார். கடந்த வாரம் உணவு பாதுகாப்பு சட்ட விஷயத்தில் காங்கிரசை கடுமையாக தாக்கிப்பேசியவர் முலாயம் சிங் யாதவ். இந்தநிலையில் பிரதமரை அவர் சந்தித்து பேசியுள்ளார். தேர்தல் நெருங்கிக்கொண்டியிருக்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சி உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. லோக்சபை தேர்தலை கருத்தில் கொண்டுதான் இந்த சட்டத்தை கொண்டுவந்துள்ளது. காங்கிரசின் நோக்கம் நன்றாக இல்லை. அது ஓட்டு வங்கி அரசியலை நடத்துகிறது. என்றெல்லாம் கடந்த வாரம் பேசியவர் முலாயம் சிங். ஆனால் நேற்று அவர், பிரதமரை சந்தித்து இருப்பது மிகப்பெரும் சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago