முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து ஆஸ்., அணியை வீழ்த்தியது

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2013      விளையாட்டு
Image Unavailable

 

டிரன்ட் பிரிட்ஜ், ஜூலை. 15 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷ ஸ் தொடர் முதல் டெஸ்ட் போட்டி யில் இங்கிலாந்து அணி 14 ரன் வித்தி யாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொ டரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி தரப்பில், இயான் பெல், பீட்டர் சன், கேப்டன் கூக் ஆகியோர் அபார மாக பேட்டிங் செய்து அணிக்கு முன் னிலை பெற்றுத் தந்தனர். அவர்களுக்கு பக்கபலமாக, ஜோ ரூட், கீப்பர் பிரை யர், பிராட் ஆகியோர் ஆடினர். 

பெளலிங்கின் போது, ஆண்டர்சன், பிராட், பின் மற்றும் ஸ்வான் ஆகி யோர் அடங்கிய கூட்டணி சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்தது. 

ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கே ல் கிளார்க் தலைமையில் இங்கிலாந்தி ல் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப் டன் அலிஸ்டார் கூக் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் டெஸ் ட் நடத்த திட்டமிடப்பட்டது. இதன்  முதல் போட்டி நாட்டிங்ஹாம் நகரில் உள்ள டிரன்ட் பிரிட்ஜில் கடந்த 10 -ம் தேதி துவங்கி 14 -ம் தேதி முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 59 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னை எடுத்தது. 

இங்கிலாந்து அணி தரப்பில், டிராட் 48 ரன்னையும், பேர்ஸ்டோ37 ரன்னையு ம், ஜோ ரூட் 30 ரன்னையும், பெல் 25 ரன்னையும், பிராட் 24 ரன்னையும் எடு த்தனர். 

பின்பு ஆடிய  ஆஸ்திரேலிய அணி முத ல் இன்னிங்சில் 64.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 280 ரன்னை எடுத்தது. 

ஆஸி. அணி தரப்பில் அறிமுக வீரரான ஆஸ்டின் அகர் அதிகபட்சமாக, 101 பந் தில் 98 ரன் எடுத்தார். தவிர, பில் ஹியூக்ஸ் 81 ரன்னையும், டி.ஸ்மித் 58 ரன் னையும் எடுத்தனர். 

அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 2 -வது இன்னிங்சில் அபாரமாக பேட்டிங் செய்து ரன்னைக் குவித்தது. அந்த அணி இறுதியில், 149.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 375 ரன்னை எடுத்தது. 

இங்கி. அணி தரப்பில், இயான் பெல் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம் சமாகும். அவர் 267 பந்தில் 109 ரன் எடு த்தார். தவிர, பீட்டர்சன் 64 ரன்னையும், கேப்டன் கூக் 50 ரன்னையும், பிராட் 65 ரன்னையும், ஜோ ரூட் 34 ரன்னையும், பிரையர் 31 ரன்னையும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சி ல் 311 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை இங்கிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து ஆடி ய அந்த அணி 110.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 296 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த முதல் டெஸ்டில் இங்கி லாந்து அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், கீப்பர் ஹாடின் அதிகபட்சமாக 147 பந்தில் 71 ரன் எடுத்தார். தவிர, ரோஜர்ஸ் 52 ரன் னையும், வாட்சன் 46 ரன்னையும், பட்டின்சன் 25 ரன்னையும், கேப்டன் கிளா ர்க் 23 ரன்னையும் அகர் 14 ரன்னையும் எடுத்தனர். 

இங்கிலாந்து அணி சார்பில், முன்னணி வேகப் பந்து வீச்சாளரான ஆண்டர்சன் 73 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடு த்தார். தவிர, பிராட் மற்றும் ஸ்வான் தலா 2 விக்கெட்டும் ஜோ ரூட் 1 விக்கெட்டும் எடுத்தனர். இந்தப் போட்டியி ன் ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய வீர ர் ஆஸ்டின் அகர் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்