முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போபர்ஸ் ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட குவாத்ரோச்சி மரணம்

ஞாயிற்றுக்கிழமை, 14 ஜூலை 2013      ஊழல்
Image Unavailable

புது டெல்லி, ஜூலை. 15 - போபர்ஸ் பீரங்கி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட இத்தாலிய தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சி காலமானார். இத்தாலியின் மிலன் நகரில் தங்கியிருந்த அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் தொடர்பான விசாரணைக்காக சி.பி.ஐ. அவரை இருமுறை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சி மேற்கொண்டது. ஆனால் பலன் கிடைக்கவில்லை. 1986 ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த போபர்ஸ் நிறுவனம் ரூ. 1,500 கோடி மதிப்பிலான பீரங்கிகளை இந்தியாவுக்கு விற்பனை செய்தது. இதில் ராஜீவ் காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவராக கருதப்படும் குவாத்ரோச்சி இடைத் தரகராக செயல்பட்டு இந்திய அரசியல்வாதிகளுக்கும், ராணுவ அதிகாரிகளுக்கும் பல கோடி லஞ்சம் கொடுக்க உதவியாக இருந்தார் என்பது முக்கிய குற்றச்சாட்டாக இருந்தது. 1993 ம் ஆண்டில் கைதாவதில் இருந்து தப்புவதற்காக குவாத்ரோச்சி இந்தியாவில் இருந்து வெளியேறினார். குவாத்ரோச்சியை இந்தியா கொண்டு வர முடியவில்லை என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்ததை அடுத்து அவருக்கு எதிரான வழக்கை முடிக்க 2011 மார்ச்சில் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்